தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பீஹார் தொழிலாளர்கள் கைது

 காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பீஹார் தொழிலாளர்கள் கைது

 காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பீஹார் தொழிலாளர்கள் கைது


ADDED : செப் 16, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 02:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி: பெரியகுளம் முருகமலை காப்புக்காட்டில் 7 வயது காட்டுப்பன்றியை வேட்டையாடிய பீஹார் தொழிலாளர்கள் 5 பேர் கைது செய்யப் பட்டனர்.

பெரியகுளம் அருகே முருகமலை நகரில் எம்.கே.ஆர்., கயிறு தொழிற்சாலையில் பீஹாரை சேர்ந்த சுகுல்குமார் 30. ரவிக்குமார் 24. சபோத்சிங் 42. கருமன்ஜி 37. அணில் குமார் 24. ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்தனர். இவர்கள் நேற்று முருகமலை காப்புக்காட்டு பகுதியில் சுருக்கு கம்பியால் 7 வயது பெண் காட்டுப்பன்றியை வேட்டையாடினர். இவர்கள் மீது கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் அரவிந்த் உத்தரவில்,தேவதானப்பட்டி ரேஞ்சர் அன்பழகன் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தார். தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வனப்பகுதியில் காட்டுப்பன்றி உடற்கூறு ஆய்வு செய்து புதைக்கப்பட்டது. -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us