/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் உரிமைத்தொகைக்கு 53,384 பேர் மனு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் உரிமைத்தொகைக்கு 53,384 பேர் மனு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் உரிமைத்தொகைக்கு 53,384 பேர் மனு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் உரிமைத்தொகைக்கு 53,384 பேர் மனு
ADDED : அக் 10, 2025 03:31 AM
தேனி: மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை பொதுமக்கள் 55,996, மகளிர் உரிமைத்தொகை கோரி 53,384 பேர் என மொத்தம் 1.09 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர்.
ஜூலை 15ல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவங்கின. முகாம் நடைபெறுவதற்கு முன் அரசு சார்பில் தன்னார்வலர்கள் பொதுமக்களிடம் கோரிக்கைகள் அச்சிட்ட தாள்களை வழங்கினர். தங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்து பொதுமக்கள் முகாம் நாளில் வழங்கினர். முகாம்கள் ஒன்றிய பகுதி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடந்தது. அனைத்து அரசுத்துறைகள் சார்பில் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. முகாம் நடத்த அரசு சார்பில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் இரு கட்டங்களாக முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. இன்று பெரியகுளத்தில் 218 வது முகாம் நடக்கிறது. இதனுடன் இந்த திட்ட முகாம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த 217 முகாம்களில் பட்டா மாறுதல், மின்வாரியம், முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் நடந்த முகாம்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 55,996 பேர் மனு அளித்துள்ளனர். இதில் 25,136 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 3 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மற்ற மனுக்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கை நடந்து வருகிறது. இது தவிர மகளிர் உரிமைத்தொகை கோரி 53,384 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்,' என்றனர்.