ADDED : மே 17, 2026 12:18 AM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக்கல்லுாரி அருகே க.விலக்கு அமிர்தா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் தனராஜ், 54; மாவட்ட கருவூலத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி அமலா நேசமணி, தேனியில் தனியார் பள்ளி ஆசிரியை.
இவர்கள் மகள் ஜாஸ்மின் ஜெசியா, பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
மே 14 இரவு, 10:30 மணிக்கு, மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மறுநாள் காலை வீட்டிற்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் கதவை கம்பியால் உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், 55 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர். அவற்றின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய். க.விலக்கு போலீசார் கொள்ளையர்களை தேடுகின்றனர்.
