ADDED : ஏப் 15, 2026 11:05 PM
மூணாறு:இடமலைகுடி ஊராட்சியில் ரேஷன் வினியோகத்தில் முறைகேடு நடந்த நிலையில், இரண்டு ஆண்டுகளில் 65 டன் அரிசி மாயமானதாக தெரியவந்தது.
மூணாறு அருகில் உள்ள இடமலைகுடி ஊராட்சி, மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்கு என முதல் தனி ஊராட்சி என்ற அந்தஸ்த்துடன் செயல்பட்டு வருகிறது. அங்கு 24 கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். சொசைட்டி குடி, வெள்ளவரகுடி ஆகிய பகுதிகளில் ரேஷன் கடைகள் உள்ளன.
ஆய்வு: இடமலைகுடி ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக ரேஷன் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால்
தேவிகுளம் தாலுகா வழங்கல் துறை அலுவலகத்தை சேர்ந்த ரேஷன் ஆய்வாளர்கள் இருவர் பெட்டிமுடி குடோன், சொசைட்டிகுடி, வெள்ளவர குடி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் ஆகியவற்றில் ஆய்வு நடத்தினர். 2024 ஏப். 1 முதல் 2026 மார்ச் மார்ச் 31 வரையிலான கால அளவில் அரிசியின் இருப்பு குறித்து ஆவணங்களை பரிசோதித்தனர். அதில் 70 டன் அரிசி இருப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்ட நிலையில், 5 டன் மட்டும் இருந்தது. 65 டன் அரிசி மாயமானதாக தெரியவந்தது. இந்த முறைகேடு 2024ல் கண்டு பிடிக்கப்பட்டு பெட்டிமுடி குடோனில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் மீது நடைவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் மீண்டும் முறைகேடுகள் நடந்தது அம்பலமானது.
