தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ 6609 சுவர் விளம்பரங்கள் அகற்றம்

 6609 சுவர் விளம்பரங்கள் அகற்றம்

 6609 சுவர் விளம்பரங்கள் அகற்றம்


ADDED : மார் 24, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 08:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட விளம்பரங்கள் 6609 இடங்களில் அகற்றப்பட்டதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலையொட்டி கடந்த 15ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சி பேனர்கள், போஸ்டர்களை தேர்தல் அதிகாரிகள், உள்ளாட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் 3459 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது.

தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் 3150 சுவர் விளம்பரங்கள் என இதுவரை மொத்தம் 6609 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டதாக தமிழக தேர்தல் ஆணையம் கூறியது. 183 வழக்குகள் இதுவரை பதிவாகி உள்ளது. எனினும் தேனியில் பல இடங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் அகற்றப்படாமல் உள்ளன. அவற்றை தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us