/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் உள்ளாட்சி தேர்தல் 70.26 சதவீதம் ஓட்டு பதிவு
/
இடுக்கியில் உள்ளாட்சி தேர்தல் 70.26 சதவீதம் ஓட்டு பதிவு
இடுக்கியில் உள்ளாட்சி தேர்தல் 70.26 சதவீதம் ஓட்டு பதிவு
இடுக்கியில் உள்ளாட்சி தேர்தல் 70.26 சதவீதம் ஓட்டு பதிவு
ADDED : டிச 10, 2025 09:32 AM

மூணாறு: இடுக்கி உள்ளாட்சி தேர்தலில் நேற்று இரவு 7:00 மணி நிலவரப்படி 70.26 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இடுக்கியில் மொத்தம்- 9லட்சத்து12 ஆயிரத்து 133 ஓட்டுகள். இதில் - 6 லட்சத்து 40 ஆயிரத்து 890 ஓட்டுகள் பதிவாகி - 70. 26 சதவீதம் பதிவானது. கடந்த 2020 நடந்த தேர்தலில் 74.68 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
மூணாறு ஊராட்சியில் 10ம் வார்டில் 6ம் எண் ஓட்டுச் சாவடியில் ஓட்டு பதிவு இயந்திரம் பழுதடைந்து 15 நிமிடம், பள்ளிவாசல் ஊராட்சியில் 4ம் வார்டில் முதலாவது ஓட்டுச் சாவடியில் ஓட்டு பதிவு இயந்திரம் பழுதடைந்து ஒன்றரை மணி நேரம் ஓட்டு பதிவு பாதிக்கப்பட்டது.
வண்டிபெரியாறு ஊராட்சியில் 13ம் வார்டில் 1ம் எண் ஓட்டுச் சாவடியிலும், குடையத்தூர் ஊராட்சியில் 3ம் வார்டில் ஊராட்சி ஒன்றியம் ஹாலில் அமைக்கப்பட்ட ஓட்டுச் சாவடியிலும் இயந்திரங்கள் பழுதடைந்து ஓட்டு பதிவு பாதிக்கப்பட்டது.
ஓட்டளிப்பு: நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் வாழத்தோப்பு ஊராட்சியில் 7ம் வார்டில் முதலாம் எண் ஓட்டுச்சாவடியிலும், உடும்பன்சோலை எம்.எல்.ஏ. எம்.எம். மணி, பைசன்வாலி ஊராட்சியில் 20 ஏக்கரில் சர்வ் இந்தியா ஆரம்ப பள்ளியிலும், தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா, தேவிகுளம் ஊராட்சியில் 2ம் வார்டில் குண்டளை ஈஸ்ட் டிவிஷனில் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி ஓட்டுச்சாவடியிலும், தொடுபுழா எம்.எல்.ஏ. ஜோசப், பூரப்புழா அரசு ஆரம்ப பள்ளியிலும் ஓட்டளித்தனர்.
மாவட்டத்தில் பல இடங்கள் மலை பகுதி என்பதால் ஓட்டு பதிவு தகவல்கள் கிடைக்க காலதாமதம் ஏற்படும் என்பதால், பதிவான ஓட்டு சதவீதத்தில் மாற்றம் வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

