/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கனமழையால் 800 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
/
கனமழையால் 800 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
ADDED : அக் 19, 2025 03:13 AM
தேனி: மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கன மழை பெய்தது. மொத்தம் 606.6 மி.மீ., மழை பதிவானது, நேற்று மாலை வரை 30 வீடுகள் சேதமடைந்து, 800 ஏக்கர் நெற்பயிரில் தண்ணீர் உட்புகுந்தன.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆண்டிபட்டி, அரண்மனைப்புதுார் தலா 14.8 மி.மீ., வீரபாண்டி 60.4 மி.மீ., பெரியகுளம் 23 மி.மீ., மஞ்சளாறு 26 மி.மீ., சோத்துப்பாறை 18.6 மி.மீ., வைகை அணை 15.2 மி.மீ., போடி 28.8 மி.மீ., உத்தமபாளையம் 28.6 மி.மீ., கூடலுார் 54.6 மி.மீ., பெரியாறு அணை 68 மி.மீ., தேக்கடி 158.4 மி.மீ., சண்முகநதி அணை95.4 மி.மீ., என மொத்தம் 606.6 மி.மீ., மழைபதிவாகி உள்ளது.
30 வீடுகள் சேதம் கன மழை, முல்லைப்பெரியாறு வெள்ளப்பெருக்கால் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட 30 வீடுகள் சேதமடைந்துள்ளன. உத்தமபாளையம், பண்ணைபுரம் பகுதிகளில் 20 வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்தது.
வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி கூறுகையில், 'கம்பம், தேனி, போடி, உத்தமபாளையம் வட்டாரங்களில் முல்லைப்பெரியாறு பாயும் பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் பரப்பு நெல் வயல்களில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. வருவாய்த்துறையினருடன் இணைந்து கணக்கெடுத்து வருகிறோம். சில இடங்களில் வயல்களில் இருந்து வெள்ள நீர் வடிந்து வருகிறது. பாதிப்புகள் முழுமையாக அறிய இரண்டு, மூன்று நாட்கள் ஆகும்,'என்றார்.