/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சருத்துப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
சருத்துப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : டிச 11, 2025 06:05 AM

பெரியகுளம்: சருத்துப்பட்டி ஊராட்சியில் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் ரோட்டில் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
பெரியகுளம் ஒன்றியம், சருத்துப்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகளில், 13 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம், குன்னூர் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பட்டாளம்மன் கோயில் பின்புறம் கிணறு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஊராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம், குன்னூர் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் தலா 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் வழங்குவதில்லை.
இதனால் 4 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை குடிநீர் சப்ளை இல்லை. இதனால் தட்டுப்பாடு நிலவுகிறது.
உள்ளூர் கிணறுகளிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் பட்டாளம்மன் கோயில் பின்புறம் உள்ள கிணற்றிலிருந்து குடிநீர் வரும் குழாய் உடைந்து இரு நாட்களாக ஏராளமான குடிநீர் வீணாகி ரோட்டில் செல்கிறது. ஊராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.

