UPDATED : ஜூன் 06, 2026 10:36 PM
ADDED : ஜூன் 06, 2026 10:31 PM

அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் வடுகபட்டியில் உள்ளது.
இந்த அலுவலகத்திற்கு ஒன்றிய பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் வசதிக்காக ஒன்றிய அலுவலக எதிர்புறம் பயணிகள் நிழற்குடை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடையின் மேற்கூரை கான்கிரீட் சேதமடைந்து கம்பி நீட்டி வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. பயணிகள் மீது விழுந்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஒன்றிய நிர்வாகம் சேதமடைந்த நிழற்குடையை அகற்றி புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--
