தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/பயன்பாட்டிற்கு வராத எரியூட்டும் மயானம்

பயன்பாட்டிற்கு வராத எரியூட்டும் மயானம்

பயன்பாட்டிற்கு வராத எரியூட்டும் மயானம்


ADDED : மார் 04, 2024 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் ரூ.1.50 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட எரியூட்டும் மயானம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

உத்தமபாளையத்தில் மக்கள் தொகை 40 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர். நகரின் கிழக்கு பகுதியில் முல்லைப்பெரியாற்றங் கரையில் பொது மயானம் உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பால் மயான விரிவாக்கம் ரூ.1.50 கோடியில் எரியூட்டும் மயானம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மூன்று சிலிண்டர்களுடன் அமைக்கப்பட்ட எரியூட்டும் மயானம், கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஒராண்டிற்கும் மேல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.பணிகள் முடிந்தபின், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் உள்ளனர்.

கடந்த வாரம் கம்பம் வாரச்சந்தை , தேவாரம் பஸ்ஸ்டாண்ட், சின்னமனூர் கால்நடை உதவி இயக்குனர் அலுவலக கட்டடங்கள் திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் எரியூட்டும் மயானமும் திறக்கப்படும் என்றனர்.

ஆனால் திறப்பு விழா பட்டியலில் இக்கட்டடம் இடம் பெறவில்லை.

அதனால் தொடர்ந்து பூட்டியே வைத்துள்ளனர். தேனி மருத்துவக்கல்லுாரிமருத்துவமனையில்இருந்து,இறந்த உடலை வாங்கி எரியூட்டி சோதனை ஒட்டத்தை நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர,பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us