/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குப்பை தொட்டியாக மாறிய குடிநீர் கிணறு
/
குப்பை தொட்டியாக மாறிய குடிநீர் கிணறு
ADDED : ஜன 13, 2026 06:04 AM

தேனி, தேனி ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்டு சுக்குவாடன்பட்டி. இந்த கிராமத்திற்கு ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய்கள் அமைத்தாலும் அந்த குழாய்கள் காட்சி பொருளாக மாறி விட்டன. அப்பகுதியில் ரேஷன் கடை அருகே ஊராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது.
இந்த கிணறு சில ஆண்டுகளுக்கு முன் வரை குடிநீர் கிணறாக பயன்பாட்டில் இருந்தது. தண்ணீர் வற்றிய நிலையில் அந்த கிணறு தற்போது குப்பை தொட்டியாக மாறி உள்ளது. பல ஆண்டுகளாக குப்பை கொட்டி நிரம்பி உள்ளது. சிலர் குப்பைக்கு தீ வைப்பதால் அருகில் வசிப்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் கிணற்றை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

