தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மலைப்பாதையில் சாய்ந்த மரம்

மலைப்பாதையில் சாய்ந்த மரம்

மலைப்பாதையில் சாய்ந்த மரம்


UPDATED : அக் 16, 2026 12:27 AM

ADDED : அக் 15, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:27 AM ADDED : அக் 15, 2026 07:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: மாவட்டத்தில் பரவலாக நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

குமுளி மலைப் பாதை பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே ரோட்டின் குறுக்கே மரம் சாய்ந்து விழுந்தது. அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. வனத்துறையினர், போலீசார் ரோட்டின் குறுக்கே சாய்ந்த மரங்களை அகற்றினர். இதனால் நேற்று மாலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப் பாதையில் சாய்ந்து விழும் நிலையில் பல ஆபத்தான மரங்கள் உள்ளன. இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் விபத்து ஏற்படுவதற்கு முன் ஆபத்தான மரங்களை அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us