ADDED : நவ 05, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலை தாக்க முயற்சி செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சின்னமனூர் ரவுண்டானாவில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவாஜி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் வேல் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் குருசாமி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்று கெஜ்ரிவாலை தாக்க முயற்சி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். சீலையம்பட்டியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் ரவி, இணை செயலாளர் குமார், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்றனர்.

