ADDED : ஆக 12, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.
13–தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலத்துறை சார்பில் ‘ராக்கிங் எதிர்ப்பு’ உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலாளர் சதீஸ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பிற மாணவர்களிடம் ராக்கிங் செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
