ADDED : மார் 26, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி வடக்கு மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் கிருஷ்ண மூர்த்தி அறிக்கை: போடி முன்னாள் நிர்வாகிகள் காமாட்சி, முருகவேல், இளங்கோவன் ஆகியோர் தே.மு.தி.க., கொள்கைக்கு முரண்பாடாகவும், கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
எனவே கட்சி தலைமை அறிவுறுத்தலின் படி இவர்களுடன் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்களும் கட்சி சம்மந்தமாக எந்த ஒரு செயலும், தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
