தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ முடங்கிய உள்ள சுற்றுலா திட்டங்கள் :செயல்படுத்த  நடவடிக்கை அவசியம்

முடங்கிய உள்ள சுற்றுலா திட்டங்கள் :செயல்படுத்த  நடவடிக்கை அவசியம்

முடங்கிய உள்ள சுற்றுலா திட்டங்கள் :செயல்படுத்த  நடவடிக்கை அவசியம்


UPDATED : ஜூலை 23, 2026 03:49 PM

ADDED : ஜூலை 23, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 03:49 PM ADDED : ஜூலை 23, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி மாவட்டத்தில் சுற்றுலாத்திட்டங்களை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டம் மழை காலங்களில் பசுமையான மாவட்டம் ஆகும். கேரளாவிற்கு சுற்றுலா செல்லும் பலரும் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவும் விரும்புகின்றனர். ஆனால், அரசு சார்பில் சுற்றுலாத்தலங்கள் பற்றிய அறிவிப்புகள், சுற்றுலாவை கவர விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் சுற்றலா பயணிகள் தேனி மாவட்ட சுற்றுலாவை தவிர்த்து விடுகின்றனர். குறிப்பாக கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா, வீரபாண்டி திருவிழாவிற்கு மட்டும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.

சிலர் சமூக வலைதளங்களில் பார்த்து ஆபத்தான இடங்களுக்கு சுற்றுலா சென்று விபத்துக்களில் சிக்குகின்றனர். இதனை தவிர்க்க மாவட்டத்தில் உள்ள சுற்றலாத்தலங்களை மேம்படுத்த வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் ஆலோசிக்கப்பட்ட மஞ்சளாறு அணையில் மிதக்கும் உணவகம், வைகை அணையில் படகு சவாரி, மலைபகுதிகளுக்கு ஜீப் சவாரி, தேனியில் இருந்து மேகமலை, கும்பக்கரை, வைகை அணை, சுருளி, சின்னசுருளிக்கு நேரடி பஸ் வசதி, சுரங்கனாறு நீர்வீழ்ச்சிக்கு வழித்தடம் அமைத்தல், வனத்துறையின் ட்ரக்கிங் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும். அரசு துறைகளை ஒருங்கிணைத்து சுற்றுலா பயணிகளை கவர அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us