UPDATED : செப் 16, 2026 04:25 PM
ADDED : செப் 16, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
தேனி:போடியில் இருந்து தேனி வழியாக மதுரை, சென்னைக்கு தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தில் ரயில் சேவையின் துவக்க இடமான போடி ரயில்வே ஸ்டேஷனை தரம் உயர்த்த வேண்டும். ஸ்டேஷனை சுற்றிலும் ரயில்வேக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.
அவற்றில் கூடுதல் ரயில்வே பிளாட்பாரம்கள் அமைக்க வேண்டும். ரயில் பெட்டிகளை நிறுத்தவும், பராமரிக்கவும் வளாகங்கள் அமைத்து போடியை ரயில் முனையமாக மாற்ற வேண்டும். இதன் மூலம் வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறுவார்கள். எனவே அதற்கான சாத்தியகூறுகளை ஆராந்து உள்கட்டமைப்பை ஏற்படுத்திட ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக கோரிக்கை மனுவை, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பினர்.
