5 ஓட்டுச்சாவடிகள் அமைந்த பள்ளிக்கு கூடுதல் பாதுகாப்பு
5 ஓட்டுச்சாவடிகள் அமைந்த பள்ளிக்கு கூடுதல் பாதுகாப்பு
ADDED : மார் 21, 2026 08:26 AM
அ நிறம் | அளவு
கம்பம்: சட்டசபை தேர்தலை சுமூகமாக நடத்த ஓட்டுச் சாவடிகள் பாதுகாப்பு குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் பதட்டமானவை, அதிக பதட்டமானவை என ஒட்டுச் சாவடிகள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கப்படும்.
இந்த தேர்தலில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கேமரா பொருத்தி மாவட்ட தேர்தல் அலுவலர் மாநில தேர்தல் ஆணையர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக ஓட்டுப் பதிவை காணும் வசதி செய்யப் பட்டுள்ளது.
எனவே 5 க்கும் மேற்பட்ட ஓட்டுச் சாவடிகள் உள்ள பள்ளி வளாகங்களை பதட்டமான ஓட்டுச் சாவடிகள் என வகைப்படுத்தி அந்த ஓட்டுச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
