ADDED : பிப் 29, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அரண்மனைத்தெருவில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடந்தது.
வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் அன்னபிரகாஷ், மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, தேனி நகர செயலாளர் கிருஷ்ணக்குமார், பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகுரு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது சலீம் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் செல்வராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் பேசினர். கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தவமணி நன்றி கூறினார்.

