தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/இலை சுருட்டுப்புழுவைகட்டுப்படுத்த ஆலோசனை

இலை சுருட்டுப்புழுவைகட்டுப்படுத்த ஆலோசனை

இலை சுருட்டுப்புழுவைகட்டுப்படுத்த ஆலோசனை


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 03:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 03:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: நெற்பயிரை தாக்கும் இலைசுருட்டுப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அலுவலர் மணிகண்ட பிரசன்னா விளக்கம் அளித்துள்ளனர்.

அவர் கூறியதாவது: இலைச்சுருட்டு புழுக்களால் நெல் பயிர் பாதிக்கப்பட்டு மகசூல் குறைய வாய்ப்புள்ளது. நோய் பாதித்த பயிரின் இலைகள் நீள வாக்கில் சுருண்டிருக்கும் உள்ளே புழுக்கள் இருக்கும். பாதிப்பு தீவிரமாக இருந்தால் வயல் முழுதும் காயந்தது போன்று வெண்மை நிறமாக காட்சியளிக்கும். இந்த பூச்சி தாக்குதலால் இலைச்சேதம், கண்ணாடி இலைச்சேதம் ஏற்பாடும். இதனை கட்டுப்படுத்த டிரைகோடெர்மா முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை காலையில் வயலில் கட்டலாம். தேவைக்கு அதிகமாக தொழு உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். வரப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முள் அல்லது சிறிய குச்சி மூலம் மூடிய இலை மடிப்புகளை சூரிய ஒளி படும்படி திறந்து வைக்க வேண்டும். வேப்பங்கொட்டைசாறு அல்லது வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். குளோரிபைரிபாஸ் ஒரு எக்டேருக்கு 1.25 லிட்டர் அல்லது கார்டாப் ஹை ட்ரோ குளோரைடு எக்டேருக்கு ஒரு கிலோவை தேவையான அளவு தண்ணீரில் கலந்து தெளித்து இலைச்சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்தலாம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us