/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெற்பயிரில் இலை கருகல், குலை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
/
நெற்பயிரில் இலை கருகல், குலை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
நெற்பயிரில் இலை கருகல், குலை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
நெற்பயிரில் இலை கருகல், குலை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : டிச 16, 2025 06:00 AM
தேனி: ''நெற்பயிரை தாக்கும் இலை கருகல், குலைநோயை எவ்வாறு தடுக்கலாம்.'' என, பெரியகுளம் வேளாண் உதவி இயக்குநர் மதுமிதா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பனிப்பொழிவு, சீதோஷ்ண நிலை காரணமாக நெற்பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோய், குலைநோய் ஏற்படுகின்றன. இந்நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கையாக சூடோமோனஸ் ஏக்கருக்கு 200 கிராம், பேசில்லஸ் சப்டிலஸ் ஏக்கருக்கு 500 கிராம் வீதம் நீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கலாம். பாக்டீரியா இலை கருகல் நோய் தாக்கிய பயிரில் இலைகள் மீது மஞ்சள் நில வரிகள் காணப்படும். மேலும் இலை நுனிகள் அலை வடிவ ஓரத்துடன் மாறும்.
நோயினை கட்டுப்படுத்த ஏக்கருக்கு காப்பர் ஹைட்ராக்சைடு 500 கிராம், ஸ்டெப்ட்ரோ மைசின் சல்பேட் 50 கிராம் வீதம் கலந்து காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.
குலைநோய் தாக்கிய பயிரின் இலை மேல் வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிற மையப் பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும்.
இந்நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 கிராம் ட்ரைசைக்லசோல் அல்லது அக்சோஸ்டிராபின், டெபிகோனசெல் 100 மி.லி., மைசின் 50 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் பூச்சி தாக்குதல் தென்பட்டால் பூச்சி மருத்து தெளிக்க வேண்டும். தழைச்சத்து உரங்கள் அதிகம் பயன்படுத்துவதை திர்க்க வேண்டும். வயல்களில் அதிக அளவு நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் இவ்வழி முறைகளை பின்பற்றுவதன் மூலம் நெல் பயிரை இந்நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்., என்றார்.

