UPDATED : அக் 08, 2026 04:45 PM
ADDED : அக் 08, 2026 04:16 PM
மூணாறு: மூணாறில் வனவிலங்குகள் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மூணாறு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம், அவற்றால் பாதிப்புகளும் அதிகரித்துள்ளது. விலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, அதற்காக வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், யானைகள் வழித்தடத்தில் உள்ள வேலிகளை நீக்குவது பற்றி வனத்துறையினர் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசித்தனர்.
எம்.எல்.ஏ.,ராஜா, தலைமை வன உயிரின பாதுகாவலர் புகழேந்தி, மூணாறு வன உயிரின பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் நெல்சன், ஈஸ்வரன், ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
யானைகள் வழித்தடத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட மின் வேலிகளை மட்டும் அகற்றி வருவதாகவும், பட்டா விளை நிலங்களில் உள்ள வேலிகள் அகற்றப்படவில்லை என வனத்துறை விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் மூணாறு வனப்பிரிவில் வனத்துறை சார்பில் கூடுதல் அதிரடிபடைகளை நியமிக்க வலியுறுத்தப்பட்டது.
