ADDED : மார் 11, 2024 06:53 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி ஹிந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை வகித்தார்.
நகர அமைப்பாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். அல்லிநகரம் மலைக்கோயில் வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழகத்தில் போதையை ஒழிக்க தமிழக அரசு, போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
