/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மீண்டும் பன்னீர் திராட்சை ஆதிக்கம் விதையில்லா திராட்சை குறைகிறது நவீன தொழில் நுட்ப ஆலோசனை தேவை
/
மீண்டும் பன்னீர் திராட்சை ஆதிக்கம் விதையில்லா திராட்சை குறைகிறது நவீன தொழில் நுட்ப ஆலோசனை தேவை
மீண்டும் பன்னீர் திராட்சை ஆதிக்கம் விதையில்லா திராட்சை குறைகிறது நவீன தொழில் நுட்ப ஆலோசனை தேவை
மீண்டும் பன்னீர் திராட்சை ஆதிக்கம் விதையில்லா திராட்சை குறைகிறது நவீன தொழில் நுட்ப ஆலோசனை தேவை
ADDED : செப் 29, 2024 05:42 AM
கம்பம் : மாவட்டத்தில் விதையில்லா திராட்சை பரப்பளவு குறைந்து பன்னீர் திராட்சை சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் திராட்சை சாகுபடி கம்பம், ஒடைப்பட்டி பகுதிகளில் அதிக பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது . கம்பம் பகுதியில் விதையுள்ள பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சை மற்றும் பன்னீர் திராட்சையும் சாகுபடி செய்யப்படுகிறது. விதையில்லா திராட்சைக்கு நல்ல விலை கிடைக்கும்.
நவம்பர் முதல் ஏப்ரல் வரை மஹாராஷ்டிராவில் இருந்து வரும் விதையில்லா திராட்சை கிலோ ரூ.200 வரை கிடைக்கும். ஆனால் பன்னீர் திராட்சை சராசரி கிலோ ரூ.50 வரை மட்டுமே கிடைக்கும், பன்னீர் திராட்சை ஆண்டு முழுவதும் கிடைக்கும். விதையில்லா திராட்சை ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்கின்றனர்.
விதையில்லா திராட்சை ஒடைப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த விவசாயிகளும், தற்போது அதை விடுத்து பன்னீர் திராட்சை பக்கம் திரும்ப துவங்கி உள்ளனர்.
இதற்கான காரணம் குறித்து திராட்சை விவசாயிகள் கூறுகையில், மஹாராஷ்டிராவில் சாகுபடியாகும் விதையில்லா திராட்சை ரகம் ஒன்றை கம்பம் பகுதியில் சாகுபடி செய்து விட்டோம். நன்றாக வருகிறது. ஆனால் அறுவடை சமயத்தில் மழை பெய்து பழம் உடைந்து வீணாகிறது. எனவே விதையில்லா திராட்சையை சாகுபடி செய்ய விரும்பவில்லை என்றார்.
ஓடைப்பட்டி விவசாயிகள் கூறுகையில், விதையில்லாத திராட்சைக்கு நவீன தொழில்நுட்ப ஆலோசனை வழங்க வேண்டும். கட்டுபடியான விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மழை பெய்தால் பழம் உடைந்து விடும். சரத், தாம்சன், சோனா உள்ளிட்ட பல ரகங்கள் உள்ளன . 1500 ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்டு தற்போது 300 ஏக்கராக குறைந்து விட்டது. காய்கறிகள், பன்னீர் திராட்சைக்கு மாறி விட்டனர் என்றார்.
மழையால் சேதமடையாத விதையில்லா திராட்சை ரகங்களை சாகுபடி செய்ய வேர் குச்சிகள் வழங்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை விளக்கிட வேண்டும். இப் பிரச்னைக்குரிய தீர்வை தோட்டக்கலைத்துறையும், திராட்சை ஆராய்ச்சி நிலையமும் காண வேண்டும். விவசாயிகளை விதையில்லா திராட்சை சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.