ADDED : ஜன 28, 2026 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் கிராமங்களில் விவசாயிகளுக்கு ஆலோசனை, தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சீலையம்பட்டியில் மாணவி ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் விவசாயி சுரேஷ் என்பவரது தோப்பில் வாழை சாகுபடியில் பாஸ்போபாக்டீரியா பயன்பாடுகள், அதன் பயன்கள், வாழை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்டவை பற்றி அப்பகுதி விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.

