ADDED : மார் 30, 2026 04:11 AM
அ நிறம் | அளவு
போடி: போடி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி நேற்று போடி போஜன் பார்க்கில் தேர்தல் பிரசாரத்தை துவங்கினார்.
கட்ட பொம்மன், தேவர்சிலை, வ.உ.சி., காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார், காமராஜ் பஜார், பி.ஹைச்., ரோடு, திருமலாபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அ.தி.மு.க., மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சற்குணம், போடி நகர செயலாளர்கள் மாரியப்பன், வாசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், பா.ஜ. மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
