ADDED : ஏப் 03, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
போடி: போடியில் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி அறிமுக கூட்டம் நகர செயலாளர்கள் மாரியப்பன், வாசு தலைமையில் நடந்தது.
மேற்கு மாவட்ட துணை செயலாளர் சற்குணம், முன்னாள் எம்.பி., பார்த்திபன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயச் சந்திரன், பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட விவசாய அணி தலைவர் தண்டபாணி, நகர செயலாளர் சித்ராதேவி, அ.ம.மு.க., துணைச் செயலாளர் மணி, த.மா.கா., நகர தலைவர் பிரபு, மீனாட்சிபுரம் பேரூராட்சி தலைவர் திருப்பதி முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகம் செய்து வெற்றி பெற வைக்க ஆலோசனை வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
