/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மெழுகுவர்த்தி ஏந்தி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
/
மெழுகுவர்த்தி ஏந்தி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 20, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அ.தி.மு.க., மாணவரணி சார்பில் பங்களாமேட்டில் 'நீட்தேர்வை ரத்து செய்வோம் என கூறி மாணவர்களை ஏமாற்றிய தி.மு.க., அரசை கண்டித்து' மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர்கள் ராமர், ஜக்கையன் தலைமை வகித்தனர். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் முத்தையா, பெரியகுளம் ஒன்றிய நிர்வாகி அன்னபிரகாஷ், மாணவரணி நிர்வாகிகள் தினேஷ், பாலமணிமார்பன், இளைஞர்பாசறை மாவட்ட செயலாளர் அப்பாஸ்மைதீன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

