/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழகம் நன்றாக இருக்க அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும்: பன்னீர்செல்வம்

ADDED : டிச 11, 2025 05:37 AM
போடி: ''தமிழகம் நன்றாக இருக்க அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் '' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் போடியில் பன்னீர் செல்வத்திடம் ' அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தின் முடிவு எப்படி இருக்கும்,' என நிருபர்கள் கேட்டனர். 'இதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் 'என பதில் அளித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, அ.ம.மு.க., வை மீண்டும் இணைப்பது குறித்து பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை முயற்சி எடுத்து வருவது பற்றி கேட்ட போது, ''தமிழகம் நன்றாக இருக்க அனைவரும் விரும்புவது பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., ஒன்றியணைய வேண்டும் என்பதுதான். இதனை பா.ஜ., விரும்புகிறது''என்றார்.