/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 08, 2024 06:17 AM

தேனி : தேனி பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சி.இ.ஓ., அலுவலகம் முன் அரசு உதவி பெறும், தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு, உரிமை மீட்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உரிமை மீட்பு குழு மாவட்ட நிர்வாகி பாதிரியார் அந்தோணிராஜ் தலைமை வகித்தார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் உயர்கல்வி இடஒதுக்கீடு, கட்டணமில்லா ஆங்கிலவழிக் கல்வி உள்ளிட்ட நலத்திட்டங்களை உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போடி இசட்.கே.எம்., பள்ளி தலைமை ஆசிரியர் ராமசுப்பு, கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், இணைச்செயலாளர் ராகவன், தமிழ் ஆசிரியர் சங்க மாநில தலைவர் சரவணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி சென்னமராஜ், கள்ளர் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ஸ்ரீரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

