ADDED : பிப் 08, 2024 05:14 AM
தேனி : தேனி நகராட்சி முன் மாவட்ட அனைத்து துாய்மை பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.,) சார்பில், நகராட்சி, பேரூராட்சி ஒப்பந்தம் மற்றும் சுய உதவிக்குழு துாய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவித்த ஊதியமாக, நாள் ஒன்றுக்கு 609 ரூபாய் வழங்க வேண்டும்.
அரசு விடுமுறை நாட்களில் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். தளவாடப் பொருட்கள் மின் மோட்டார் சைக்கிகள் குறைந்த எண்ணிக்கையில் பயன்பாட்டிற்கு இருப்பதால், அவற்றை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் பிச்சைமுத்து தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்டப் பொருளாளர் பாண்டி, ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் ஞானவேல், மாவட்டப் பொருளாளர் பாண்டி, மாவட்ட துணைத் தலைவர் சென்றாயப் பெருமாள், இந்திய கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

