ADDED : ஆக 28, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, ஆக. 29-
பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டி வடக்கு காலனியைச் சேர்ந்தவர் ராஜா. சமையல் தொழில் செய்து வந்தார். பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்திய நிலையில் உறவினர்களுடன் மது குடித்தார். வாந்தி எடுத்த நிலையில் இரவில் தூங்கினார். காலையில் மயக்கநிலையில் இருந்தார். ராஜாவை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
--
