ADDED : செப் 08, 2025 06:18 AM

பெரியகுளம் பெரியகுளம் வடுகபட்டி சங்கரநாராயணன் நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் 29ம் ஆண்டு குடும்பத்தினருடன் சந்திப்பு நிகழ்ச்சி வடுகபட்டி தனியார் மண்டபத்தில் நடந்தது.
நிகழ்வில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் படித்த மாணவர்கள் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை வகித்தார்.
முன்னாள் ஆசிரியர் நவநீத கிருஷ்ணன், முன்னாள் மாணவர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் தேவகாந்தன், பரமசிவம் வரவேற்றனர்.
ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தினமலர் நாளிதழ் லட்சிய ஆசிரியர் விருதுக்கு தேர்வான பகவதியம்மன் நடுநிலைப் பள்ளி ஆசிரியை விஜயா கவுரவிக்கப்பட்டார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழுவினர் செய்திருந்தனர்.