ADDED : பிப் 26, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் 1980ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் அன்பரசன் வரவேற்றார்.
எழுத்தாளர்கள் மைக்கேல் ஜீவநேசன், தாமோதரன், மின்வாரிய இளநிலை பொறியாளர் ரோஜாராணி பங்கேற்றனர். மைக்கேல் ஜீவநேசன் எழுதிய இரும்பு மனிதர்கள் புத்தகம் வெளியிடப்பட்டது. ஓய்வு பெற்ற மின்வாரி உதவி பொறியாளர் திருலோகசந்தர், ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியப்பன, ஐ.டி.ஐ., நிர்வாக அலுவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பயிற்சி அலுவலர் பிலிப்போவாஸ் நன்றி கூறினார்.
