ADDED : மே 13, 2026 04:09 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் ரூ.29.60 கோடியில் 3 ஆண்டுகளாக நடந்து வரும் அம்ரூத் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
சுமார் 32 ஆயிரம் பொதுமக்கள் வழங்கினர்னர். 4500 குடிநீர் இணைப்புகள், 10.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன. மக்கள் தொகை பெருக்கம், நகர் மயமாதல் உள்ளிட்டவற்றால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அம்ரூத் 2.0. திட்டத்தில் ரூ.29.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கின.
இத்திட்டத்தில் முல்லைப்பெரியாற்றில் புதிய உறைகிணறு அமைப்பது, 11,503 மீ., நீளத்திற்கு மெயின் பகிர்மான குழாய், குடிநீர் விநியோக பைப் லைன் 60,668 மீ., நீளத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டது.
சுமார் 13 குடிநீர் மேல் நிலை தொட்டிகள் அமைத்து 25.20 லட்சம் லிட்டர் குடிநீர் சேமிக்க திட்டமிடப்பட்டது. புதிதாக 5,586 குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு செய்திருந்தனர்.
ஆனால் பணிகள் துவங்கி 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் குடிநீர் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் வினியோகம் செய்யப் படுகிறது.
பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வினியோகத்தை சீராக்க வேண்டும். குழாய் பதிக்க தோண்டிய ரோடுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
