
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது.
இப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் தலைவர் ஓ.ராஜா தலைமையில் நடந்தது.
மேலாண்மை இயக்குனர் சசிகலாவதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பள்ளி இயக்குனர் டாக்டர் முத்துகுகன், தாளாளர் ஐஸ்வர்யா, முதல்வர் பாரதரத்தினம் முன்னிலை
வகித்தனர்.
காமெடி நடிகர் மதுரை முத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். குரு தட்சிணாமூர்த்தி அறக்கட்டளை தலைவர் சரவணன், டாக்டர் மாதவ் பிரவீன் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.