ADDED : மார் 23, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
கூடலுார்:லோயர்கேம்ப் அரசு துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. சி.இ.ஓ., நாகேந்திரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். அரசு தேர்வுகள்துறை உதவி இயக்குனர் சாந்தலட்சுமி, தொடக்க கல்வி டி.இ.ஓ., நாகலட்சுமி, பி.இ.ஓ.,ஹெலன் மெட்டில்டா முன்னிலை வகித்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சந்திரா, ஞானசரஸ்வதி, கஸ்தூரி திலகம் கவுரவிக்கப்பட்டனர்.விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
