ADDED : ஏப் 04, 2026 07:47 PM

அ நிறம் | அளவு
தேனி:தேனி பங்களாமேடு, மேலப்பேட்டை இந்து நாடார்கள் பத்ரகாளியம்மன் கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வருசாபிஷேக விழா நடந்தது. கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை. புண்யாக வாஜனம், வேதிகார்ச்சனை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், வேத பாராயணம், மஹா பூர்ணாகுதி, தீபாரதனையும் நடந்தன.
உறவின் முறை தலைவர் தர்மராஜன், துணை தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பத்ரகாளியம்மன் கோவில் பராமரிப்புக்குழு நிர்வாக ஆலோசகர் விஜயகுமார், செயலாளர் தாளமுத்து உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.
