/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேட்டைத் தடுப்பு காவலர்கள் முற்றுகை
/
வேட்டைத் தடுப்பு காவலர்கள் முற்றுகை
ADDED : அக் 04, 2025 04:19 AM

கூடலுார்: முதுநிலை பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி நேற்று முன்தினம் கூடலூர் வனச்சரக அலுவலகத்தை, வேட்டை தடுப்பு காவலர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்கள் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து நேற்று கூடலுார் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்கள் கூறும் போது: தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், பல ஆண்டுகள் ஆபத்தான சூழலில் பணியாற்றி வருகிறோம் எனவும், புலிகள் யானைகள் கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகளை பாதுகாக்கவும், வேட்டையாடுபவர்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் உள்ளோம்.
ஆனால் தங்களின் பெயரை முதுநிலை பட்டியலில் சேர்க்காமல் புறக்கணித்துள்ளனர்.
உடனடியாக முதுநிலை பட்டியலில் சேர்க்க வேண்டும், வனத்துறையில் நிரந்தரப் பணியிடமாக்க வேண்டும், நீண்ட கால சேவைக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
இவர்களிடம் வனத்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில், உயர் அதிகாரிகளுக்கு தங்களது கோரிக்கைகள் அனுப்பி வைப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மேகமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் 82 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை கம்பம் வனச்சரக அலுவலக வளாகத்தில் 17 பேர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.