/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயன்பாடு இல்லாத வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் சமூக விரோத செயல்கள் கட்டுமான பணி துவங்காததால் அரசு ஊழியர்கள் அவதி

ADDED : அக் 18, 2025 04:33 AM

பெரியகுளம்: தாமரைக்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டடம் சேதம் அடைந்து பயன் இன்றி உள்ளதால் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி வருகிறது. இதனை அகற்றி புதிய குடியிருப்பு கட்டாததால் அரசு ஊழியர்கள் சிரமம் அடைகின்றனர்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி 10 வது வார்டு, சுப்பிரமணிய சிவா தெருவில் வீட்டுவசதி குடியிருப்பு 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்குள்ள 'ஏ பிளாக் முதல் இ பிளாக் வரை' 5 பிளாக்குகளில் கீழ்தளம் முதல் மேல்தளம் வரை 72 குடியிருப்புகளில் அரசு ஊழியர்கள் வாடகை அடிப்படையில் வசித்து வந்தனர்.
அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை, வசதிக்கு தகுந்தார் போல் குறைந்த வீட்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. வீட்டு வசதிக்கு ஏற்ப ரூ.2800 முதல் ரூ.8 ஆயிரம் வரை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. வெளியூரிலிருந்து மாறுதலாகி வருபவர்கள் இக் குடியிருப்புக்களை பயன் படுத்தி வந்தனர்.
சமூக விரோத செயல்களின் கூடாரம் பல ஆண்டுகளாக குடியிருப்பு பராமரிப்பு இல்லாமல், பழுதடைந்து கட்டடம் சேதமடைந்து வந்தது. வீடுகளின் சிமென்ட் கான்கீரிட் சேதமடைந்துள்ளன. இதனால் அரசு ஊழியர்கள் வீட்டை காலி செய்து சென்றனர். இங்குள்ள கதவுகள், ஜன்னல்கள் உட்பட பல்வேறு பொருட்கள் திருடு போனது. ஒவ்வொரு காலியான பிளாக்குகளிலும் மாலை முதல் இரவு வரை ஒரு கும்பல் 'மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மது பாராகவும், கஞ்சா விற்பனை மற்றும் புகைப்பது, சில பெண்களை வைத்து விபச்சாரம் என பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது.
மாரிமுத்து, பால் கறவையாளர் கூறியதாவது: இரவில் பாழடைந்த வீடுகளில் 'கூத்தும் கும்மாலமாக' சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. முந்தைய காலங்களில் இரவில் தென்கரை போலீசார் இரவில் ரவுண்ட்ஸ் வந்தனர். தற்போது யாரும் வருவதில்லை. குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சேதமடைந்த அனைத்து பிளாக்குகளையும் இடித்துவிட்டு, புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.