சபரிமலை ரயில்பாதை திட்ட ஆய்வு எம்.பி.,க்கு பாராட்டு விழா
சபரிமலை ரயில்பாதை திட்ட ஆய்வு எம்.பி.,க்கு பாராட்டு விழா
ADDED : மார் 06, 2026 06:02 AM
கம்பம்: திண்டுக்கல் - சபரிமலை ரயில்பாதை திட்டத்திற்கு முயற்சி எடுத்து வரும் தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா நடந்தது.
கம்பம் புதுப்பட்டி நகர் நல கமிட்டி சார்பில் நடந்த பாராட்டு விழாவிற்கு கமிட்டி தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார், தி.மு.க. அயலக மாவட்ட துணை அமைப்பாளர் ரவி முன்னிலை வகித்தார்.
கம்பம் முக்குலத்தோர் சங்க தலைவர் குமரேசன் வரவேற்றார்.
நீண்ட காலமாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கையான திண்டுக்கல் -சபரிமலை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த லோக்சபாவில் தேனி எம்.பி., தங்க தமிழ்ச் செல்வன் தொடர்ந்து வலியுறுத்தியதை தொடர்ந்து மத்திய அரசு ஆய்விற்கு உத்தரவிட்டதற்கு நகர் நல கமிட்டி, ஊர் முக்கிய பிரமுகர்கள் பாராட்டினார்கள்.
எம்.பி., ஏற்புரையில், திண்டுக்கல்- சபரிமலை ரயில் திட்டம் ஆய்வுக்கு மத்திய அரசு எடுத்துள்ளது போல் சாக்குலுத்து மெட்டு ரோடு கண்டிப்பாக அமையும்,' என்றார்.
