ADDED : ஜூலை 17, 2025 11:59 PM

--பெரியகுளம்: வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2024- -20-25 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு, பரிசளிப்பு விழா நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சின்னராஜா வரவேற்றார். போடி வர்த்தக பிரமுகர்கள் பிரபு, செந்தில்குமார் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கினர். தேனி மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முத்தரசப்பன், வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜோதி, ஆடிட்டர் வெங்கட்ராமன், உதவி தலைமையாசிரியர் கவுதம் அசோக்குமார் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மேலாண்மை குழு உறுப்பினர் செல்வக்குமார பாண்டியன் செய்திருந்தார். உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகைராஜ் நன்றி கூறினார்.-
