ADDED : ஜூலை 01, 2026 12:29 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு நூலகத்தில் படித்து போட்டித்தேர்வு எழுதி அரசு பணியாற்றுபவர்கள், அரசு பள்ளிகளில் படித்து அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாரத்தான் வீரர் முருகேசனுக்கு, பாராட்டு விழா நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன் தலைமை வகித்தார். வடகரை வாசகர் வட்ட தலைவர் மணி கார்த்திக் முன்னிலை வகித்தார். நூலகர்கள் விசுவாசம், சண்முகம் வரவேற்றனர். எம்.எல்.ஏ., சபரி ஐங்கரன் பரிசு வழங்கினார். டி.எஸ்.பி., நல்லு, எழுத்தாளர் பொன்சி, சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சிதம்பர சூரியவேலு, நூலக ஆர்வலர்கள் திருப்பதி, நித்தியானந்தம், தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
