/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒரே வீட்டில் 93 வாக்காளர்கள் திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடு
/
ஒரே வீட்டில் 93 வாக்காளர்கள் திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடு
ஒரே வீட்டில் 93 வாக்காளர்கள் திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடு
ஒரே வீட்டில் 93 வாக்காளர்கள் திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடு
ADDED : டிச 31, 2025 05:37 AM
தேனி: ஒரே வீட்டு எண்ணில் 93 வாக்காளர்கள் இடம் பெற்ற விவகாரத்தில், வாக்காளர்களிடம் 'படிவம் 8' வழங்கி திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சிறப்பு திருத்த முகாம் முடித்து, வரைவு வாக்காளர் பட்டியில் டிச.,19ல் வெளியிடப்பட்டது. இதில் போடி சட்டசபை தொகுதியில் பாகம் 11ல் வீட்டு எண் 1ல் 93 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதே போல் சில பாகங்களில் ஒரே வீட்டு எண்ணில் 87, 73, 58,49, 43 பேர் என இடம் பெற்றிருந்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குறிப்பிட்ட பாகங்களில் வாக்காளர்கள் ஆய்வு செய்தோம். பாகத்தில் உள்ள வாக்காளர்கள் உள்ளனர். சிலருக்கு கதவு எண்கள் இல்லை. ஒரு சில வீடுகளில் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். அந்த வீடுகளில் 13 வாக்காளர்கள் வரை உள்ளார்கள். இதனால் படிவம் 8 வழங்கி முகவரி மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தி வருகிறோம், ' என்றனர்.