ADDED : மார் 06, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பீட்டு முகாம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலக்குழு தலைமையில் நடந்தது.
கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, டாக்டர்கள் ஜெய்கணேஷ், பாலகிருஷ்ணன், சவுந்தர்யா ராகினி மாணவர்களை பரிசோதித்தனர். ஏற்பாடுகளை சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் முரளி செய்திருந்தார்.

