ADDED : செப் 04, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தவர் கருப்பசாமி. இவர் மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பலரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி உள்ளார்.
இவர் ரூ. 80 லட்சம் வரை ஏமாற்றியதாக பலரும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புகார் அளித்தனர். இந்நிலையில் போலீசார் கருப்பசாமியை கடந்த வாரம் கைது செய்தனர். இந்நிலையில் இணை இயக்குநர் சாந்தாமணி, கருப்பசாமியை சஸ்பெண்ட் செய்தார்.