ADDED : ஜன 05, 2026 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி எஸ்.பி., அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம் ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு வழக்குகள் பற்றி ஆய்வு செய்தார்.
மேலும் போக்சோ, கொலை உள்ளிட்ட வழக்குகளில் 15 நாட்களுக்குள் தண்டனை பெற்று தர வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்னைகள், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழாக்கள் பற்றியும் ஆலோசனை வழங்கினார். இக் கூட்டத்தில் மதுரை மண்டல டி.ஐ.ஜி., அபிநவ்குமார், தேனி எஸ்.பி., சினேஹா பிரியா முன்னிலை வகித்தனர். பயிற்சி ஏ.எஸ்.பி., சத்ரியா கவின், ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், உள்ளிட்டோர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

