ADDED : நவ 16, 2026 07:27 PM
அ நிறம் | அளவு
மூணாறு: கேரளா, ஆலுவாவில் உள்ள கேரளா அரசு பஸ் டிப்போவில் இருந்து ஆலூ வா, காந்தலூர் இடையே மூணாறு வழியாக பஸ் இயக்கப்படுகிறது.
அந்த பஸ் நேற்று (நவ.,15) காந்தலூரில் இருந்து புறப்பட்டு மாலையில் மூணாறில் தபால் அலுவலகம் ஜங்ஷனில் உள்ள பஸ் ஸ்டாண்ட்டிற்கு வந்தது. அப்போது பஸ் கண்டக்டர் ஆலுவாவை சேர்ந்த ஜோமிட் 50, டை சிலர் தாக்கினர். அதில் காயம் அடைந்தவரை மூணாறு டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். காந்தலூரில் இருந்து வரும்போது மூணாறு அருகே 5ம் மைல் பகுதியில் தனியார் சுற்றுலா பஸ்க்கு வழிவிடாததால் ஆத்திரத்தில் டிரைவர் உள்பட சிலர் ஜோமிட்டை தாக்கியதாக தெரியவந்தது. மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
