ADDED : அக் 15, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி தெற்கு காலனியில் வசிப்பவர் ராம்குமார் 32, இவரது மனைவி சங்கீதா 30 இதே ஊரை சேர்ந்த கண்ணன் மகன் விஸ்வா என்பவருக்கும் ராம்குமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்து சென்ற ராம்குமாரை, விஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கினர்.
தனது கணவரை காப்பாற்ற சென்ற மனைவியையும் அந்த கும்பல் தாக்கியது. இதில் கணவர்,மனைவிக்கு காயம் ஏற்பட்டது.
சின்னமனூர் போலீசார் விஸ்வா, கார்த்திக், கண்ணன் உட்பட 11 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.