UPDATED : அக் 08, 2026 07:28 PM
ADDED : அக் 08, 2026 06:36 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி சாவடித்தெருவைச் சேர்ந்த வேல்முருகன் 30.
ராணுவ வீரர். இவரது மனைவி புவனேஸ்வரி 26. தனியார் பள்ளி ஆசிரியை. இவரது வீட்டருகே வசிப்பவர் ராஜேந்திரன். ராஜேந்திரன் நாய் வளர்த்து வருகிறார். அந்த நாய் தெருவில் செல்பவர்கள், புவனேஸ்வரி மகளை துரத்தியுள்ளது. நாயினை கட்டி வைத்து வளர்க்குமாறு புவனேஸ்வரி கூறினார். இதற்கு ராஜேந்திரன், இவரது மனைவி ஜோதிமணி, புவனேஸ்வரி வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கினர். புவனேஸ்வரி புகாரில் தேவதானப்பட்டி போலீசார் ராஜேந்திரன், ஜோதிமணியிடம் விசாரணை செய்கின்றனர்.
